இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், டப்பா கொண்டு வர தடை - ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இருமுடியில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் டப்பாக்கள் கொண்டு வர அம்மாநில உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், டப்பா கொண்டு வர தடை - ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
x
ஆண்டுதோறும் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜை காலங்களில் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். இருமுடி கட்டி  ​​கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பன்னீர் உள்ளிட்ட பூஜை பொருட்களை, கோயிலில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் பக்தர்கள் அவற்றை ஆங்காங்கே கொட்டி, பிளாஸ்டிக் பைகளை போட்டு விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நாளொன்றுக்கு சேரும் 25 டன் குப்பையில், 18 டன் பிளாஸ்டிக் குப்பையாக உள்ளதால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாக தொடரப்பட்ட வழக்கில் பிளாஸ்டிக் பொருட்கள்,  கொண்டு வர கேரள உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில், இருமுடி கட்டும் போது தற்போது பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தி வருவதாக, தேவஸ்தான சிறப்பு ஆணையர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தெரிவித்தார். இதனையடுத்து வரும் மண்டல கால பூஜை முதல் இருமுடிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் டப்பாக்கள் பயன்படுத்த தடை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இதனை நடைமுறைப்படுத்த தேவஸ்தானத்துக்கு உதவ வனத்துறை மற்றும் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்