புதிய 100 ரூபாய் நோட்டுகளுக்காக மாற்றப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்

புதிதாக அறிமுகமாக உள்ள 100 ரூபாய் நோட்டுகளுக்காக ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்ய 100 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கூறப்படுகிறது.
புதிய 100 ரூபாய் நோட்டுகளுக்காக மாற்றப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்
x
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு புதிதாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு ஒவ்வொரு நிறத்திலும் 200, 50, 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை விட புதிய ரூபாய் நோட்டுகள், சிறியதாக இருந்ததால் ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டன. 
 
இந்த நிலையில், வெளிர் நீல நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி அண்மையில் முடிவு செய்துள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுக்களை விட, இவை அளவில் சிறியதாக இருக்கும் என்பதால், நாடு முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரம் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்க 100 கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபோல, ஏடிஎம் இயந்திரங்களில் புதிய ரூபாய் நோட்டுக்கான பிளேட்களை பொருத்தவும் 12 மாதங்களாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற, நடைமுறை சிக்கல்களால் புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியாவதிலும் உடனடியாக கிடைப்பதிலும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்