வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி?

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, சில நாட்களே உள்ள நிலையில், வீட்டில் இருந்தபடியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி?
x
வீட்டில் இருந்தே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்...

incometaxindiaefiling.gov.in என்ற websiteன் முதல் பக்கத்தில், Register urself, login here என்று இருக்கும். முதல் முறை வருமான வரி கணக்கை தாக்கல் செய்கிறீர்கள் என்றால், புதிதாக REGISTER  செய்ய வேண்டும். REGISTER ஐ கிளிக் செய்து, உங்களை தேர்வை பதிவு செய்ய வேண்டும். மாத சம்பளதாரர்கள் பெரும்பாலும், INDIVIDUAL ஐ தேர்வு செய்ய வேண்டும். அதில் பான் எண், பாண் அட்டையில் உள்ளது போல் பெயர் பிறந்த நாள் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். 

இதற்கு முன் வருமான வரி கணக்கை யார் மூலமாவது  தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்றால், நேராக LOGIN செய்யலாம். அதில் USERNAME, passwordஐ பதிவு செய்யவும்.. USERNAME உங்கள் பான் எண், PASSWORD  தெரியவில்லை என்றால், FORGET PASSWORD கொடுத்து, OTP மூலம் புதிய PASSWORDஐ செட் செய்து கொள்ளலாம். 

login செய்து உங்கள் அடிப்படை தகவல்களை கொடுக்கவும். பின்னர். EFILE  tabன் கீழ், income tax returns ஐ கிளிக் செய்யவும். அதில் பான் எண், ASSESSMENT YEARல் 2018-19, எந்த வருமான வரி படிவம் என்பதை தேர்வு செய்யவும். பெரும்பாலும், மாத சம்பளதாரர்களுக்கு  ITR 1 தான், 50 லட்சத்திற்கு அதிகமான வருமானம், ஒன்றுக்கும் அதிகமாகமான வீடுகள் மூலம் வாடகை வருமான வருகிறது போன்றவர்கள் ITR 2 ஐ தேர்வு செய்யவும்.

அதில் PART Aவில் பொதுவான தகவல்களை பதிவு செய்யவும் அல்லது சரி பார்க்கவும்.. அதாவது, பான் எண், ஆதார் எண், முகவரி போன்றவை.. அடித்த பக்கத்தில், உங்கள் FORM 16ல் , BALANCE (1-2)     என்று ஒரு தொகை இருக்கும். அதை வரி படிவத்தில் B1 என்ற காலத்தில் பதிவு செய்யவும். வீட்டு கடன் மீதான வட்டியை,  INTEREST PAYABLE ON BORROWED CAPITALல் பதிவு செய்யவும். 

அதன் பிறகு, 80C, 80CCC, 80 CCD பிரிவுகளில் உங்கள் FORM 16 உள்ளவற்றை பார்த்து பதிவு செய்யவும்.  HEALTH INSURANCE PREMIUM, LIC PREMIUM போன்றவறை பதிவு செய்து save draft கொடுத்து, அடுத்த பக்கத்திற்கு செல்லவும். TAX DETAILSல், உங்கள் நிறுவனத்தின் பெயர், வரி செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிடவும். 

tax paid and verificationல் உங்கள் வங்கியின் ifsc CODE, வங்கி கணக்கு எண், போன்றவற்றை பதிவு செய்யவும். பின்னர், அதன் கீழே,  I FURTHER DECLARE THAT I AM MAKING THIS RETURN IN MY CAPACITY AS என்று இருக்கும், அதில் உள்ள கட்டத்தில் SELF  என்று பதிவு செய்து, ஊரை பதிவு செய்து, SAVE DRAFT  கொடுத்து அடுத்த பக்கத்திற்கு வரவும்.
 
அதில்  ஆசிரமங்கள் போன்றவற்றிக்கு, ஏதேனும் DONATION  கொடுத்திருந்தால், அதை பதிவு செய்யவும். இவை அனைத்தையும் பதிவு செய்த  SUBMIT, கொடுத்தால், OTP மூலம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் நடைமுறை நிறைவடையும். கணக்கை தாக்கல் செய்ததற்கான  21உங்கள் மின்னஞசல் `வரிக்கும் அனுப்பப்படும்.

 

Next Story

மேலும் செய்திகள்