நாப்கின்களுக்கு முழு வரி விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு

பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாப்கின்களுக்கு முழு வரி விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு
x
டெல்லியில் நடைபெற்ற 28-வது ஜி.எஸ்.டி குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 46 திருத்தங்களுடன், பல்வேறு பொருட்களுக்கு வரிவிதிப்பில் இருந்து சலுகை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

68 சென்ட்டி மீட்டர் அளவு வரையிலான டிவிகள், வேக்கம் கிளீனர், கிரைண்டர், மிக்சி, வாட்டர் ஹீட்டர், பெயிண்ட், வார்னீஷ், வாசனை திரவியம், ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், வீடியோ கேம்ஸ் சாதனங்கள் உள்ளிட்டவற்றிற்கான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1000 வரையிலான விலை மதிப்புள்ள ஷூக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை, 5 சதவீதமாக குறைக்கவும், கைப்பை, அலங்கார கண்ணாடிகள், கையால் செய்யப்பட்ட விளக்குகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 12 சதவீதமாக குறைக்கவும் ஜி,எஸ்.டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் யூரியாவிற்கு விதிக்கப்படும் வரியை, ஐந்து சதவீதமாக குறைக்கவும், 12 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிக்கப்பட்டிருந்த சானிட்டரி நாப்கின்களுக்கு, வரிவிதிப்பில் இருந்து பூரண விலக்கு அளிக்கவும்  முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த முடிவுகள் அனைத்தும், வரும் 27-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்