கிளப் லாக்கர்களில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல் - போலீஸ், வருமானவரித்துறை தீவிர விசாரணை

பெங்களூருவில் தனியார் பொழுது போக்கு மையத்தில் பணம், நகை மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளப் லாக்கர்களில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல் - போலீஸ், வருமானவரித்துறை தீவிர விசாரணை
x
பெங்களூருவில் போரிங் என்ற தனியார் பொழுது போக்கு மையத்தில் உள்ள லாக்கர்களை பராமரிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, 2 லாக்கர்களின் சாவிகள் இல்லாததால், அதை நிர்வாகத்தினர் உடைத்துள்ளனர். அதில் இரண்டு பைகளில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் பணம்,  5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் நூறு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த 2 லாக்கர்களும் அவினாஷ் அமர்லால் என்ற தொழிலதிபருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் அளித்த புகாரின் பேரில், வருமானவரித்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் விளையாட்டு கிளப்பில் உள்ள லாக்கர்களில் இருந்து கோடிக்கணக்கில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்