கேரளாவில் கனமழை - 13 பேர் உயிரிழப்பு
கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது
கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டயம், இடுக்கி, கண்ணூர், மலப்புரம், பத்தனதிட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story