கேரளாவில் சுங்கச்சாவடி தடுப்பை உடைத்த எம்எல்ஏ
கேரளாவில் சுயேச்சை எம்.எல்.ஏ.ஜார்ஜ் சுங்கச்சாவடி ஒன்றை சூறையாடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது
கேரளாவில் சுயேச்சை எம்.எல்.ஏ. ஜார்ஜ், திரிச்சூரில் உள்ள சுங்கச்சாவடி ஒன்றை சூறையாடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த அவர் காரிலிருந்து இறங்கி சுங்க சாவடி தடுப்பை தனது கையால் உடைக்க முற்பட்டார். இதையடுத்து, எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் தடுப்பை உடைத்து சுங்கச் சாவடி ஊழியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இந்த காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story