திருப்பதி கோயிலில் கும்பாபிஷேக விழா : "விழா நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" - கோயில் செயல் அலுவலர் அறிவிப்பு

திருப்பதி கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெறும் நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் கும்பாபிஷேக விழா : விழா நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் - கோயில் செயல் அலுவலர் அறிவிப்பு
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடக்கிறது.  இதையொட்டி, ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கபட மாட்டார்கள் என கூறப்பட்டது. 

இந்நிலையில், கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி, குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

இது தொடர்பாக, பக்தர்களிடம் வரும் 23ஆம் தேதி வரை கருத்துகள் கேட்கப்படும் என்றும், அதன்பிறகு அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்