திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு - பக்தர்களுடன் இணைந்து எதிர்க்கப் போவதாக ரோஜா தகவல்

திருப்பதி கோயில் கும்பாபிஷேகத்துக்காக, பக்தர்களுக்கு அனுமதி மறுத்தால், பக்தர்களுடன் சேர்ந்து எதிர்க்க உள்ளதாக நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு - பக்தர்களுடன் இணைந்து எதிர்க்கப் போவதாக ரோஜா தகவல்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறுது. இதையொட்டி, ஆகஸ்ட் 9 முதல் 17ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த ஆந்திர எம்.எல்.ஏவும் நடிகையுமான ரோஜா, பக்தர்களுக்கு அனுமதி தராவிட்டால், அவர்களுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாக கூறினார். தேவஸ்தானத்தின் முடிவு பக்தர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், முந்தைய தலைமை அர்ச்சகர் எச்சரித்தது போல முறைகேடுகள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்