தொல்லியல் ஆய்வுத்துறைக்கு புதிய தலைமை அலுவலகம் - பிரதமர் இன்று திறந்து வைத்தார்
டெல்லி திலக் மார்கில், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறைக்கு கட்டப்பட்டுள்ள புதிய தலைமை அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
சர்வதேச தரத்திலான வசதிகள், எரிபொருள் சிக்கனம் கொண்ட மின் விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்பட்டு உள்ள மத்திய தொல்லியியல் நூலகத்தில் ஒன்றரை லட்சம் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் வைக்கப்பட்டுள்ளன.
Next Story

