மகாராஷ்டிராவில் 800 வருடங்களாக நடைபெற்று வரும் யாத்திரை

மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும், சுவாமி சாந்த் தியானேஸ்வர் நினைவு யாத்திரையில் லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் 800 வருடங்களாக நடைபெற்று வரும் யாத்திரை
x
ஒன்றல்ல.... இரண்டல்ல... சுமார் 17 நாட்கள் நடைபெறும் யாத்திரை இது... கிட்டத்தட்ட 800 ஆண்டுகளாக இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில், சாந்த் தியானேஸ்வர் மகாராஜா பால்கி யாத்திரை, கடந்த 6 ஆம் தேதி, அலான்டி நகரில் தொடங்கியது. வரும் 22ம் தேதி, இந்த யாத்திரை, பந்தார்பூரில் நிறைவடைகிறது. ஞானதேவா என்றும், ஞானேஷ்வர் மற்றும் தியானேஷ்வரர் என்றும் அழைக்கப்படும், சுவாமி சாந்த் தியானேஸ்வர் மராத்திய வைணவ அடியாராக கருதப்படுகிறார். இவர், 1275 - 1296ம்  ஆண்டு கால கட்டத்தில்,  ஆலந்தியில் வாழ்ந்தார். இவர் கவிஞராகவும், ஆன்மிகவாதியாகவும் கருதப்படுகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில், குறிப்பிடத்தக்க மதத் தலைவர்களான சாந்த் தியானேஸ்வர், மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் சாந்த் துக்காராம். ஆகியோர் புனேவுக்கு அருகாமையில் வாழ்ந்தவர்கள். நகரத்துடனான அவர்களது தொடர்பு சுமார் 300 கிலோ மீட்டர்களுக்கு அப்பாற்பட்டது. பந்தார்பூருக்கு ஆண்டு தோறும், யாத்திரை செல்வதன் மூலம், அந்த ஆன்மீக தலைவர்களை, அவர்களது பக்தர்களை நினைவு கூர்வதாக உள்ளது. ஆண்டுதோறும் இவ்விரு  மகான்களின், உருவப் படங்களை பல்லக்கில் சுமந்து கொண்டு இந்த யாத்திரை செல்கிறது. இந்த யாத்திரை ஆஷாதி ஏகாதசி நாளன்று நிறைவடைய உள்ளது. இந்த பக்தர்கள் செல்லும் வழிகளில் எல்லாம், அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சுமார் 800 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த யாத்திரையில் லட்சக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்