8 காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல்

சென்னை மாநகரில் போலீசார் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 காவலர்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல்
x
* சென்னை அபிராமிபுரம் காவல் ஆய்வாளர் அஜூ , அதிமுக மாநில இளைஞரணி இணை செயலாளர் ஏ.கே. முகிலின் மகன் கவிமுகிலால் என்பவரால் தாக்கப்பட்டார்.

* ஓட்டேரியில் 8 காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல், ரோந்து வாகனத்தை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. 

* மதுரவாயல் தலைமை காவலர் அன்பழகன்  ரோந்து பணியின்போது ரவுடி கும்பலால் வெட்டப்பட்டதாக தெரிகிறது.  

* டொக்கன் ரவி என்ற ரவுடியை பிடிக்க சென்ற போது, மயிலாப்பூர் உதவி ஆய்வாளர் இளையராஜா தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, செம்பியம் நுண்ணறிவு பிரிவு காவலர் சிவலிங்கத்தை வழிப்பறி கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. 

* அதேபோல், பரங்கிமலை நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜசேகர் வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டார். 

* மெரினாவில் ஆயுதப்படை காவலர் மாரிக்கண்ணன் மீது நடத்திய தாக்குதலில் அவரது கை உடைந்தது. 

* எழும்பூரில் உதவி ஆய்வாளர் சம்பத் மீது வழிப்பறி கொள்ளையர்கள் பிளேடால் தாக்குதல் நடத்தினர். 

இந்த 9 சம்பவங்களில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 16 பேர் சிறிய மற்றும் பெரிய அளவிலான காயங்கள் அடைந்திருப்பதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்