எம்.ஜி.ஆரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல புதிய முயற்சி

அடுத்த தலைமுறைக்கு சிதறாமல் கொண்டு செல்லும் முயற்சியை தொடங்கி இருக்கிறது ஒரு குழு.
எம்.ஜி.ஆரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல புதிய முயற்சி
x
எம்.ஜி.ஆரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும், அவரது வாக்கு வங்கியை அப்படியே கட்டிக்காக்கவும் புதிய முயற்சியை துவங்கி இருக்கிறது ஒரு குழு.

1950களில் அறிமுகமான எம்.ஜி.ஆர் என்ற மந்திரச் சொல்லின் வசீகரம், தமிழக அரசியலில் இன்னமும் குறையவில்லை. சில மாதங்களுக்கு முன் கூட, கல்லூரி விழா ஒன்றில் அவரைப் பற்றி ரஜினி பேசியதே அதற்கு சாட்சி.60 ஆண்டுகளுக்கு முன் வெளியான, 'நாடாடி மன்னன்' போன்ற படங்கள் கூட இன்றைய புதுப்படங்களுக்கு நிகராக ஓடுவது, எம்.ஜி.ஆரை கடவுளாகவே கருதும் அவரது பக்தர்களால் தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவரது வாக்கு வங்கியை அடுத்த தலைமுறைக்கு சிதறாமல் கொண்டு செல்லும் முயற்சியை தொடங்கி இருக்கிறது ஒரு குழு.  இதற்காக, சென்னையில் 15ம் தேதி, 'அகில உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு' நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருபவர், எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தவரும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான சைதை துரைசாமி.

Next Story

மேலும் செய்திகள்