தனியார் பேருந்துகளுக்கு நிகராக நவீன வசதியுடன் கூடிய அரசுப் பேருந்துகள்

குளிர்சாதன வசதியுடன் கூடிய 515 உயர் ரக பேருந்துகள் அறிமுகம்
தனியார் பேருந்துகளுக்கு நிகராக நவீன வசதியுடன் கூடிய அரசுப் பேருந்துகள்
x
அரசுப் பேருந்துகள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற மக்களின் மனநிலையை மாற்றும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது இந்த அரசுப்  பேருந்துகள். மக்களின் தேவைகளை மனதில் கொண்டு 515 பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 மண்டலங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. குளிர்சாதன வசதி, நவீன கழிவறை வசதி, படுக்கைகள், சிசிடிவி கேமரா என எல்லாம் இந்த பேருந்துகளில் உண்டு. அதே நேரம் இந்த பேருந்தின் சிறப்பம்சமாக கருதப்படுவது ஓட்டுநர் மது அருந்தி விட்டு இந்த வாகனத்தை இயக்க முடியாது என்பது தான். இதற்காக பேருந்தில் ஒரு கருவியை பொருத்தி இருக்கிறார்கள். பேருந்தை இயக்குவதற்கு முன்னதாக ஓட்டுநர் அந்த கருவியின் முன்னால் நின்று ஊத வேண்டும். ஒரு வேளை ஓட்டுநர் மது அருந்தியவராக  இருந்தால் பேருந்தை இயக்க அனுமதிக்கப்படுவதில்லையாம். 

Next Story

மேலும் செய்திகள்