பத்மாவதி தாயார் கோவில் அர்ச்சகர்களுக்கு கட்டாய பணி ஓய்வு - அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய திருப்பதி தேவஸ்தானம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பணி புரியும், பாரம்பரிய அர்ச்சகர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பத்மாவதி தாயார் கோவில் அர்ச்சகர்களுக்கு கட்டாய பணி ஓய்வு - அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய திருப்பதி தேவஸ்தானம்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பணி புரிந்து வந்த அர்ச்சகர்களில் 65 வயது மேற்பட்டவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் தலைமை அர்ச்சகராக பணி புரிந்து வந்த ரமண தீக்‌ஷதலு உள்ளிட்ட 14 பேர் பணி ஓய்வு பெற்றனர். இந்நிலையில், திருச்சானூர் பத்மாவதி, தாயார் கோவிலில் பணிபுரிந்து வந்த பாரம்பரிய அர்ச்சகர்களான, கிருஷ்ணசாமி, சேஷாத்ரி, முரளி ஆகியோருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்குவதற்கான நோட்டீசை இன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து, வழக்கு தொடரப் போவதாக அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்