"ஸ்டெர்லைட்டை மூடும் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்" - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட்டை மூடும் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும் - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு
x
தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அரசாணை பிறப்பித்த தமிழக அரசு ஆலைக்கு சீல் வைத்து மூடியது.

இதற்கு எதிராக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகமான வேதாந்தா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விதிகளை பின்பற்றியே ஸ்டெர்லைட் இயங்கி வந்தததாகவும், விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் காற்று மற்றும் நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை எந்த வகையிலும் காரணம் இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்