ஆறுமுகசாமி ஆணைய விசாரணை - புதிய சிக்கல்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக, ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கும் மருத்துவக் குழுவில் இடம் பெற மருத்துவர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆறுமுகசாமி ஆணைய விசாரணை - புதிய சிக்கல்
x
அப்பல்லோ மருத்துவமனை சார்பில், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை விபரங்களை தெரிந்து கொள்ள, மருத்துவ குழு அமைத்துத் தர, விசாரணை ஆணையம் அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இதற்கான அனுமதியை அரசு வழங்கிய நிலையில், நான்கு சிறப்பு மருத்துவர்களை நியமிக்கும் பணியில் ஆணையம் இறங்கியது. இதற்காக தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவர்களை ஆணையம் தரப்பில் அணுகிய போதிலும், யாரும் விருப்பம் காட்டவில்லை என தெரிகிறது. 

இதனால் மருத்துவ குழு அமைக்க அனுமதி கிடைத்து ஒரு மாதம் ஆகி விட்ட போதிலும், அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட முயற்சியாக பிற மாநிலங்களில் இருந்து மருத்துவர்களை அழைக்கும் முயற்சியில் ஆணையம் இறங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்