இணையவழி மின் நுாலக திட்டத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன -ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசின் இணையவழி மின் நூலக திட்டத்தில், தமிழ் மொழி இடம்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இணையவழி மின் நுாலக திட்டத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன -ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசின் இணையவழி மின் நூலக  திட்டத்தில், தமிழ் உள்ளிட்ட தென்னக மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

எனவே, முதலமைச்சர் தலையிட்டு இணையவழி நூலக திட்டத்தில் தமிழ் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து, ஸ்டாலினுக்கு பதிலளித்து பேசிய, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், இணையவழி நுாலக திட்டத்தில்  தமிழ் உள்ளிட்ட  8 உலக மொழிகளை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், தமிழை புறக்கணித்தால், அதை எதிர்த்து முதலில் குரல் கொடுப்போம் எனவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்