விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் - இலங்கை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என இலங்கை இணை அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் - இலங்கை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
x
இலங்கையின் யாழ்ப்பாணத்தில், அதிபரின் மக்கள் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார். 


 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அமைச்சர்கள் வஜிர அபயவர்த்தன, திலக் மாரப்பணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழர்களின் நிலங்களை திரும்பக் கொடுத்த இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  முன்னாள் போராளிகளுக்கு மைத்ரி பால சிறிசேன அரசு எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய விஜயகலா,  தமிழர்கள் உயிருடன் வாழ வேண்டுமானால்,  இலங்கையின் வட-கிழக்கு பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும் என, அமைச்சர்கள் முன்னிலையிலே தெரிவித்தார். இந்தப் பேச்சைக் கேட்டு அரங்கில் இருந்தவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்