மதுரையை பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்றுவோம் - ஆட்சியர் வீரராகவராவ்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு, இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையை பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்றுவோம் - ஆட்சியர் வீரராகவராவ்
x
பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து அறிவுறுத்த,   இன்று நடைபெற்ற குறைதீர் மூகாமில் அரசு அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் துணிப்பைகளை வழங்கினார்.  மதுரை மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் தடை குறித்து முதலில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என்றும் அடுத்ததாக பிளாஸ்டிக்கை பயன்பட்டில் இருந்து குறைத்து, கடைசியாக பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.    முதலமைச்சரின் அறிவிப்பு படி,  2019ம் ஆண்டு முதல் மதுரை மாவட்டம் முழுவதும்,  பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.   


Next Story

மேலும் செய்திகள்