"அய்யோ என்னை கொல்லப் பாக்கிறாங்களே" - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் அலறல்

யார் இந்த பெண்? : போலீசார் தீவிர விசாரணை
அய்யோ என்னை கொல்லப் பாக்கிறாங்களே - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் அலறல்
x
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த மன நலம் பாதிக்கப்பட்ட  பெண் ஒருவரை, போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது, தம்மை கொல்ல முயலுவதாக மன நலம் பாதிக்கப்பட்ட பெண் அலறியதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்த பெண் அழைத்து செல்லப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மாவட்ட ஆட்சியர் அறைக்கு அருகில் பல மணி நேரம் உட்கார்ந்திருந்த இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனவே, மன நலம் பாதிக்கப்பட்ட பெண் குறித்து, திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்