ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மூலமாக ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் - பொன். ராதாகிருஷ்ண‌ன்

ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மூலமாக கடந்த ஒராண்டில் மட்டும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மூலமாக ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் - பொன். ராதாகிருஷ்ண‌ன்
x
ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த‌து அடுத்து சென்னை சேத்துப்பட்டில் ஜி.எஸ்.டி தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ண‌ன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக ஜி.எஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை முதன்மை ஆணையர் சி.பி.ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்