"ஜிஎஸ்டி என்பது மிகச்சிறந்த பொருளாதார சீர்திருத்தம்" - அருண் ஜேட்லி

ஜிஎஸ்டி என்பது மிகச்சிறந்த பொருளாதார சீர்திருத்தம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.
ஜிஎஸ்டி என்பது மிகச்சிறந்த பொருளாதார சீர்திருத்தம் - அருண் ஜேட்லி
x
முந்தைய வரி முறை சிக்கலாக இருந்ததால் ஜிஎஸ்டியின் தேவை அவசியமானதாக இருந்தது என்று தெரிவித்த அருண் ஜெட்லி, நாட்டில் உள்ள சந்தைகளை ஒன்றிணைக்க, இந்த வரி அமைப்பு தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.ஜிஎஸ்டியின் சிறந்த செயல்பாடு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அதற்கு சிலகாலம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இல்லை என்றால் இந்த சீர்திருத்த நடவடிக்கைக்கு சாத்தியமில்லை எனவும்.இந்த முன்மாதிரி திட்டத்தால் வரி வசூல் அதிகரித்துள்ளதையடுத்து, வரும் காலத்தில் பல பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் அருண்ஜெட்லி கூறியுள்ளார். ஜிஎஸ்டி என்பது மிகச்சிறந்த பொருளாதார சீர்திருத்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்