வெள்ளகாடாக காட்சியளிக்கும் புவனேஸ்வர் நகரம்

வெள்ளகாடாக காட்சியளிக்கும் புவனேஸ்வர் நகரம். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு..
வெள்ளகாடாக காட்சியளிக்கும் புவனேஸ்வர் நகரம்
x
ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  புவனேஸ்வர் நகரில் பெய்த பலத்த மழை காரணமாக, பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சாலைகளில் சுமார் 4 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளிலும், மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒடிஷா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், நான்காம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்