தீ விபத்து பகுதியை தீயணைப்பு வண்டிகள் அடையும் நேரம் சென்னையில் 6 நிமிடமாக குறைக்க நடவடிக்கை - தீயணைப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

தீ விபத்து பகுதியை தீயணைப்பு வண்டிகள் அடையும் நேரம் சென்னையில் 6 மற்றும் புறநகரில் 10 நிமிடமாக குறைக்க நடவடிக்கை - தீயணைப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
தீ விபத்து பகுதியை தீயணைப்பு வண்டிகள் அடையும் நேரம் சென்னையில் 6  நிமிடமாக குறைக்க நடவடிக்கை - தீயணைப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
x
அவசர அழைப்பு பெறப்பட்டதில் இருந்து தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் அடையும் நேரம் சென்னையில் 6 நிமிடங்களாகவும், புறநகரில் 10 நிமிடங்களாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு சுமார் 21 ஆயிரம் தீ விபத்து அழைப்புகளில் பணியாற்றி 96 மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக தீயணைப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

298 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் தீ விபத்து
அல்லாத இதர மீட்பு நடவடிக்கைகளில், 21,497 மீட்பு அழைப்புகளில் சீரிய முறையில் பணியாற்றி, 3,877 மனித உயிர்களை காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தை ஓக்கி புயல் தாக்கியதில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய, பிற மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு துறை பணியாளர்களும், வாகனங்களும் சென்று சிறப்பாக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்