சிறந்த புத்தகங்கள் தான் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன - தமிழக ஆளுநர்

நெய்வேலியில் 21-வது புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்த பின் ஆளுநர் பேச்சு
சிறந்த புத்தகங்கள் தான் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன - தமிழக ஆளுநர்
x
நெய்வேலியில், என்.எல்.சி சார்பில் நடத்தப்படும் 21-வது புத்தகக் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பேசிய பன்வாரிலால், சிறந்த புத்தகங்கள் தான் சிறந்த மனிதர்களை உருவாக்குவதாக தெரிவித்தார். 

மேலும், அனல் மின் நிலையங்களுக்கு பதில், சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம், காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட எரிசக்திகளை உருவாக்கும் முயற்சியில் என்.எல்.சி நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்