ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
x
தமிழக காவல்துறையில் உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் ஐஜியாக இருந்த அசோக்குமார் தாஸ், சிபிசிஐடியின் சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேபோல் குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த தாமரைக்கண்ணன், ஆயுதப்படை பிரிவு ஐஜியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ், அருணாச்சலம், உள்ளிட்டோரும் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்... 

காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவின் ஏடிஜிபியாக இருந்த மஞ்சுநாதா, காவலர் குடியிருப்பு பிரிவு இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இதேபோல்  ஏடிஜிபியாக இருந்த ராஜிவ் குமார், மகேஷ் குமார், தமிழ்செல்வன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்