மனைவியை தம்பி அடித்ததால் ஆத்திரம் - தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்

ரத்தம் சொட்ட கத்தியுடன் திரிந்த ஓட்டல் தொழிலாளி
மனைவியை தம்பி அடித்ததால் ஆத்திரம் - தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்
x
மனைவியை  தம்பி  அடித்ததால் ஆத்திரம் அடைந்த அண்ணன் , தம்பியை  கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம் அறந்தாங்கியில் அரங்கேறி உள்ளது . 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  நாயக்கர்பட்டியைச்  சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.....  இவரது தம்பி கணேசன்... இருவரும் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர் .  சில ஆண்டுகளுக்கு முன்னர்  வெளி நாட்டில்  வேலை பார்த்து வந்த கணேசன் மாதம் தோறும் அண்ணன் வெள்ளைச்சாமிக்கு பணம் அனுப்பி வந்திருக்கிறார்... 

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணேசன், தாம் அனுப்பிய பணம் குறித்து கணக்கு கேட்ட போது அவருக்கும்  அண்ணன் வெள்ளைச்சாமிக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது .. இரு தினங்களுக்கு முன் இந்த மோதல் முற்றியுள்ளது .. அப்போது ஆத்திரம் அடைந்த கணேசன்,  தனது அண்ணன் வெள்ளைச்சாமியின் மனைவியை அடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தம்பி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார் வெள்ளைச்சாமி...

இந்நிலையில், நேற்று அதிகாலை ஓட்டலில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே  மனைவியை அடித்ததால் , ஆத்திரத்தில் இருந்த வெள்ளைச்சாமி, ஓட்டலில் இருந்த கத்தியை எடுத்து கண்மூடித்தனமாக  தம்பி கணேசனை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கணேசன்  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். 

ஆத்திரத்தில் தம்பியை கொலை செய்து விட்ட வெள்ளைச்சாமி, செய்வதறியாது திகைத்துள்ளார் .. காவல்நிலையத்தில் சரணடைய கத்தியுடன் சுற்றி திரிந்த , அவர் , காவல்நிலையம் எங்கே உள்ளது என்று கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம் கேட்டுள்ளார் ... ரத்தம் சொட்ட  சொட்ட  கத்தியுடன் திரிந்த அவர் குறித்து காவல் நிலையத்துக்கு  பொதுமக்கள்  தகவல் கொடுத்துள்ளனர்  விரைந்து வந்த காவல்துறையினர் வெள்ளைச்சாமியை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால், அறந்தாங்கியில் பரபரப்பான சூழல் நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்