இந்தியாவில் தாய்மொழி பேசுவோர் எண்ணிக்கை எவ்வளவு..?

இந்தியாவில் எந்தெந்த மொழி எவ்வளவு பேரால் பேசப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.. மொழிவாரியாக 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வுத்தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தாய்மொழி பேசுவோர் எண்ணிக்கை எவ்வளவு..?
x
இந்தியாவில், இந்தி பேசுவோரின் எண்ணிக்கை, 43 புள்ளி 63 சதவீதமாக உயர்ந்துள்ளது... இது, 2001ம் ஆண்டில், 41 புள்ளி 03 சதவீதமாக இருந்துள்ளது.  


பெங்காலி மொழி, 2வது இடத்தைப் பிடித்துள்ளது. 4வது இடத்தில் இருந்த மராத்தி மொழி, 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3வது இடத்தில் இருந்த தெலுங்கு மொழி, 4வது இடத்திற்கு சென்றுள்ளது. 

பெங்காலியை தாய்மொழியாக கொண்டவர்கள் சுமார் 8 புள்ளி 3 சதவீதத்தினராவர்.... மராத்தியை தாய் மொழியாக கொண்டர்கள் 7 புள்ளி 09 சதவீதமும், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் 6 புள்ளி 93 சதவீதமும் உள்ளனர். 

இந்த வரிசையில், தமிழ் மொழி 5வது இடத்தில் உள்ளது. 2001ம் ஆண்டிலும் அதே இடம் தான்... 

ஆனால், 2001ம் ஆண்டு தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களின் எண்ணிக்கை, 5 புள்ளி 91 சதவீதமாக இருந்து, 2011ம் ஆண்டு, 5 புள்ளி 89 சதவீதமாக குறைந்துள்ளது. 

அட்டவணையிடப்பட்ட இந்தியாவின் 22 மொழிகளில், சமஸ்கிருதமும் இடம் பெற்றுள்ளது. சமஸ்கிருத மொழியை தாய் மொழியாக கொண்டு, சுமார் 24 ஆயிரத்து 821 பேர், பேசுவதாக தெரிய வந்துள்ளது. 

போடோ, மணிப்பூரி, கொங்கணி மற்றும் Dogri மொழி பேசுபவர்களை விட சமஸ்கிருத மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவாகும்... 

அட்டவணையிடப்படாத மொழியாக கருதப்படும் ஆங்கில மொழியை, முதன்மையாகப் பேசுபவர்கள் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

இதில், சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர், மகராஷ்டிராவில் உள்ளனர். இதற்கு அடுத்த படியாக, தமிழ்நாடு 2ம் இடம் பெற்றுள்ளது.  கர்நாடகா, 3வது இடத்தில் உள்ளது. 

இந்தியாவில் அட்டவணையிடப்படாத மொழிகள் பட்டியலில் உள்ள Bhili மொழி, ராஜஸ்தானில் பேசப்படுகிறது. இந்த மொழியை, சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பேசி வருகின்றனர். ''பில்லி'' என்பது, மேற்கு மத்திய இந்தியாவில் பேசப்படும் ஒரு மேற்கத்திய இந்திய - ஆரிய மொழி ஆகும்.

ஆறாவது இடத்தில் இருந்த உருது மொழி, 7வது இடத்திற்கு சென்றுள்ளது. 2001ம் ஆண்டில் 5 புள்ளி 01 சதவீதமாக இருந்த உருது மொழி பேசுவோர், 4 புள்ளி 34 சதவீதமாக குறைந்துள்ளனர். 

7வது இடத்தில் இருந்த குஜராத்தி மொழி, 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 புள்ளி 74 சதவீத த்தினர் குஜராத்தி மொழி பேசுகின்றனர்.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன... 
 
 சுமார் 3 புள்ளி 29 சதவீதம் பொது மக்கள், பிற மொழிகளில் இருந்து தங்களது தாய் மொழிக்கு திரும்பியுள்ளதாகவும் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்