சட்டப்படிப்பில் சர்வதேச அளவில் சாதிக்கும் சென்னை மாணவி

சென்னையைச் சேர்ந்த அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவி பார்கவி கண்ணன் இந்தியாவிலேயே சிறந்த சட்டக்கல்லூரி மாணவி என்ற விருதைப் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்
சட்டப்படிப்பில் சர்வதேச அளவில் சாதிக்கும் சென்னை மாணவி
x
சென்னை  ராயப்பேட்டையை சேர்ந்தவர் பார்கவி கண்ணன்.  இவர் அம்பத்கர் சட்டக்கல்லூரியில் இந்த வருடம் இளநிலை சட்டப்படிப்பு முடித்து மேற்படிப்பிற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டியில் இவருடைய தலைமையிலான அணி உட்பட 48 அணிகள் பங்கேற்றன.இதில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறார்  . மேலும் சர்வதேச அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றார். சர்வதேச அளவில் சட்டக்கல்லூரிகளுக்கு இடையேயான மாதிரி நீதிமன்ற போட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில், சார்க் நாடுகளைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியிலும் முதலிடத்தை பெற்று இந்தியாவிலேயே சிறந்த சட்டக்கல்லூரி மாணவி என்ற விருதை வென்றிருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்