மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 4 ஆண்டுகள் நிறைவு - மெழுகுவர்த்தி ஏந்தி தொழிலாளர்கள் அஞ்சலி

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, போரூரை அடுத்த, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 4 ஆண்டுகள் நிறைவு - மெழுகுவர்த்தி ஏந்தி தொழிலாளர்கள் அஞ்சலி
x
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, போரூரை அடுத்த, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம்  இடிந்து விழுந்து  விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனநாயக கட்டுமான தொழிலாளர்கள் நல மத்திய சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தின் அருகே, மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்