காஷ்மீர் பனிலிங்கத்தை தரிசிக்க - அமர்நாத் யாத்திரை முதல் குழு பல்தால் பகுதியை அடைந்தது

காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை செல்லும் முதல் குழு, பல்தால் பகுதியை அடைந்தது
காஷ்மீர் பனிலிங்கத்தை தரிசிக்க - அமர்நாத் யாத்திரை முதல் குழு பல்தால் பகுதியை அடைந்தது
x
அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க நேற்று ஜம்மு மலையடிவார ராணுவ முகாமில் இருந்து, அமர்நாத் யாத்திரை செல்லும் முதல் குழு புறப்பட்டது. இந்தக் குழு பல்தால் பகுதியை நேற்று இரவு சென்றடைந்தது. அவர்களை கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்று உணவு அளித்தனர். அங்கிருந்து அந்த குழுவினர், இன்று அமர்நாத் யாத்திரையை தொடங்குகின்றனர். முன்னதாக, காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் அந்த குழுவினர் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையின்போது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். அதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்