சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலை: நிலத்திற்கு உரிய நிவாரணம் தரப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு

சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச் சாலைக்காக நிலத்தை கொடுத்து 9 ஆண்டுகளாகியும் இன்னமும் தங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலை:  நிலத்திற்கு உரிய நிவாரணம் தரப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு
x
சேலம் : உளுந்தூர்பேட்டை 4 வழிச் சாலைக்காக நிலத்தை கொடுத்து 9 ஆண்டுகளாகியும் இன்னமும் தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, நிவாரணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை  4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. 136 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படுவதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்தது. அப்போதைய நிலத்தின் மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. 

பல கட்ட பணிகளை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் 4 வழிச்சாலை, மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் இன்னமும் தங்கள் நிலத்தை கையகப்படுத்தியதற்கான நிவாரணத்தை வாக்குறுதி அளித்தபடி வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். நிலத்தை கையகப்படுத்திய போது ஒரு சிறிய அளவிலான தொகையை மட்டுமே தங்களுக்கு கொடுத்ததாகவும், மீதமுள்ள தொகை இன்னமும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என நிலம் கொடுத்த விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

நிலம் மட்டுமின்றி கிணறு, மரம் போன்றவற்றிற்கும் உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.அரசின் நிவாரண தொகையை நம்பி தங்கள் விவசாய நிலத்தை ஒப்படைத்த மக்கள், இன்று அது கிடைக்காத விரக்தியில் வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கான தொகையை கேட்டு எங்கு சென்றாலும் ஏமாற்றமே மிஞ்சுவதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 9 ஆண்டுகளாக வாக்குறுதி அளித்தபடி நிவாரணம் கிடைக்காமல் தவித்து வரும் விவசாயிகள், அதை உடனே வழங்க அரசு முன் வர  வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளனர். சேலம் முதல் சென்னை வரை பசுமை வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த பிரச்சினை தலை தூக்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்