கருப்பு பண வழக்கு விசாரணை: சிதம்பரம் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி ப.சிதம்பரம் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டள்ளது.
கருப்பு பண வழக்கு விசாரணை: சிதம்பரம் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
x
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள சொத்துகளையும் வங்கி கணக்குகளையும் மறைத்ததாக சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி, சிதம்பரம் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்களின் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்