ஓட்டுநர் உரிமம் வழங்கியதில் முறைகேடு - ரூ.10 கோடிக்கு மேல் லஞ்சம்

மதுரையில், முறைகேடாக ஓட்டுநர் உரிமம் வழங்கியதில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 10 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஓட்டுநர் உரிமம் வழங்கியதில் முறைகேடு - ரூ.10 கோடிக்கு மேல் லஞ்சம்
x
மதுரை மாவட்டத்தில் 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஊழல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.  

2015- 2016 நிதி ஆண்டில் மட்டும் போலியான கல்வி சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு 6 ஆயிரத்து 777 பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கி இருப்பதும், இதற்காக 10 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து, இதில் தொடர்புடைய 6 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் 11 ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என மொத்தம் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்