காவல்துறை சிறப்பு படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சிறப்பு படை காவலர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை சிறப்பு படை காவலர் தூக்கிட்டு தற்கொலை
x
வனப் பகுதியில் நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க  தமிழ்நாடு காவல்துறை சார்பில் சிறப்பு படை செயல்படுகிறது. இதில் காவலராக பணியாற்றிவந்த கோபி, சத்தியமங்கலம் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் பணியில் இருந்தார். 

இன்று காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு அவர் வெளியே வராததால், சக காவலர்கள் கதவை உடைத்து பார்த்தனர். 

அப்போது காவலர் கோபி, தூக்குப் போட்டு இறந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக கோபி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்