இமாச்சல பிரதேசம் : பல ஆண்டுகளாக சுடர் விட்டு எரியும் கோவில் தீபம்

கோவில் தீபம் ஒன்று, எவ்வித எரிபொருளும் இல்லாமல், நூறு ஆண்டுகளை தாண்டியும் எரிந்து கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா...?
இமாச்சல பிரதேசம் : பல ஆண்டுகளாக சுடர் விட்டு எரியும் கோவில் தீபம்
x
இமாச்சல பிரதேச மாநிலத்தின் கங்கிரா என்ற இடத்தில் அமைந்துள்ளது ஜூவாலா ஜி கோவில்... இந்த கோவிலில் உள்ள தீபத்தை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த தீபம், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித எரிபொருளும் இல்லாமல் சுடர் விட்டு எரிந்து வருகிறது. ஆதிபராசக்தியின் நாக்கு தான் இவ்வாறு எரிவதாக இதிகாசங்கள், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இப்பகுதி மக்களும் இவ்வாறே நம்பி வருகின்றனர். இங்கு எரிந்து வரும் ஜோதியின் மகத்துவம் அறிந்த மன்னர் அக்பர் கோவிலுக்கு தங்க குடை ஒன்றை பரிசளித்ததாக கூறப்படுகிறது. 

இந்த அதிசயத்தை பற்றி அறிந்த விஞ்ஞானிகள் பலர் இவற்றை கட்டுக்கதையாக எண்ணி, பூமிக்கடியில் எரிமலை இருக்கலாம், இயற்கை வாயு காரணமாக தீபம் எரிகிறது என்ற பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். ஆனால் ஆய்விற்கு பின்னர் அவர்களது கூற்றுகள் கட்டுக்கதையாகி போனதே உண்மை... தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்த சோதனைகளுக்கு பிறகும் ஜோதி எரிவதற்கான மூலம் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.ஆராய்ச்சியாளர்களை அதிர வைத்து அசராமல் எரிந்துவரும் ஜூவாலா ஜீ கோவில் ஜோதி, அறிவியலுக்கு அப்பாற்பட்ட உலக அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்