பிளாஸ்டிக் ஒழிப்பு சாத்தியமா...?

பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க அரசு முழு முயற்சி எடுத்து வரும் நிலையில், அதற்கு மாற்று ஏற்பாடுகளாக நாம் செய்ய வேண்டியது என்ன?
பிளாஸ்டிக் ஒழிப்பு சாத்தியமா...?
x
அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னோட்டம் போல வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து சேலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அந்த மாநகராட்சி தடை விதித்துள்ளது. பூமியில் புதையுண்டு கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஆனால் நம் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்திருக்கும் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழித்து விட முடியுமா ? என்ற சந்தேகம் நம்மில் எழாமல் இல்லை. கடைகளில் கொடுக்கப்படும் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதன் மூலம் பிளாஸ்டிக்கை படிப்படியாக குறைக்க முடியும் என்கிறார் சமூக ஆர்வலர் எக்ஸ்னோரா நிர்மல்.


Next Story

மேலும் செய்திகள்