பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள் கூட எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு, பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு, பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
*பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டிருப்பதாக, மராட்டிய மாநிலத்தில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தகவல் அளித்திருந்தார்.
 
*இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது, 6 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, ஒருவர் மோடியின் அருகில் வந்தார். 

*இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். 

*மாவோயிஸ்ட்கள் அதிகம் இருப்பதாக கருதப்படும் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மோடி சுற்றுப்பயணம் செய்யும் போது, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அந்தந்த மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

*இதேபோல, சாலையோரக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என, மோடியிடம் எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கேட்டுக் கொண்டுள்ளது. 

*இந்த உத்தரவை அடுத்து, எஸ்.பி.ஜியின் அனுமதி இல்லாமல், பிரதமர் மோடியை மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது.Next Story

மேலும் செய்திகள்