ஆயுதக்குவியல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: பாதுகாப்பாக ஆயுதங்களை அழிக்க திட்டம்

ராமேஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் குவியல்களை, நீதிபதி இன்று பார்வையிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுதக்குவியல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: பாதுகாப்பாக ஆயுதங்களை அழிக்க திட்டம்
x
அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன ரக துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணி வெடிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை திருவாடானை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி, பார்வையிட்ட பின் அழிக்கப்பட இருந்தது. ஆனால் நேற்று நீதிபதி பார்வையிட வராததால், அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கைபற்றிய ஆயுதங்களை இன்று நீதிபதி பார்வையிட்ட பின், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த ஆயுதங்களை செயலிழக்க வைத்து அழிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்