இந்து கலாசாரத்தை கற்றுத் தர, "இந்து டாஸ்க் போர்ஸ்"

இந்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கலாசாரத்தை கற்றுத் தருவதற்காக, "இந்து டாஸ்க் போர்ஸ்" என்ற அமைப்பை இந்து மடம் உருவாக்கி உறுப்பினர்களை சேர்த்து வருகிறது.
இந்து கலாசாரத்தை கற்றுத் தர, இந்து டாஸ்க் போர்ஸ்
x
கர்நாடகாவின் மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் "லவ் ஜிகாத்" சம்பவங்களை  தடுக்க, மங்களூரில் உள்ள வாஜ்ரதேஹி மடம் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.அந்த மடத்தை சேர்ந்த ராஜசேகரானந்தா சுவாமிஜி தலைமையில் "ஹிந்து டாஸ்க் போர்ஸ்" எனும் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம், இந்து கலாச்சாரம் குறித்து விளக்கப்பட உள்ளது. இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம் பெண்களை காதலிக்கும் வேற்று மதத்தினரிடம் இருந்து அவர்களின் மனதை மாற்றுவதும் இதன் நோக்கமாகும். இந்த அமைப்பில் வழக்கறிஞர்கள், மனோதத்துவ நிபுணர்கள். சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றுள்ளனர்.  அமைப்பிற்கு உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு, ஆட்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்