மாணவிகள் பூ,பொட்டு வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியர் - அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பள்ளியில் மாணவிகள் பூ,பொட்டு வைக்கக்கூடாது என தலைமை ஆசிரியர் ஆணையிட்டதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
மாணவிகள் பூ,பொட்டு வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியர் - அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
x
மாணவிகள் பூ,பொட்டு வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியர்நாகர்கோவில் புதூர் பகுதியில் அமைந்துள்ள அரசு துவக்க பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ராணிபாய், மாணவ, மாணவிகள் பூ,பொட்டு,கைகளில் கட்டியுள்ள கயிறுகள் ஆகியவற்றுக்கு தடை விதித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் மத பிரச்சனையை தூண்டும் நோக்கில் தலைமை ஆசிரியர் செயல்படுவதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதையடுத்து தகவலறிந்த போலீசார் விரைந்து பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.Next Story

மேலும் செய்திகள்