ராமேஸ்வரம் அருகே குவியல் குவியலாக நவீன ரக துப்பாக்கி குண்டுகள் கண்டெடுப்பு

ராமேஸ்வரம் அருகே கழிவுநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது, குவியல் குவியலாக நவீன ரக துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே குவியல் குவியலாக நவீன ரக துப்பாக்கி குண்டுகள் கண்டெடுப்பு
x
குவியல் குவியலாக துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்புதங்கச்சிமடத்தை  அடுத்த அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில், மீனவர் எடிசன் என்பவரது வீட்டில், கழிவுநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், நவீன ரக துப்பாக்கி குண்டுகள், கண்ணி வெடி மற்றும் ராக்கெட் லாஞ்சர் ஆகியவையும் கிடைத்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்