போர் விமானியான டீ கடைக்காரரின் மகள்

டீ கடைக்காரரின் மகள் போர் விமானியானது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது
போர் விமானியான டீ கடைக்காரரின் மகள்
x
மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு டீ கடைக்காரரின் மகள் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய விமானப் படையின் போர் விமானிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். கடந்த 7-ம் தேதி இந்த தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இதில் 22 பேர் போர் விமானி பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்சல் கங்க்வாலும் (24) ஒருவர். ஆன்சலின் தந்தை சுரேஷ் என்பவர், மத்திய பிரதேசம், நீமுச் என்ற பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். டீ கடைக்காரரின் மகள் போர் விமானியானது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்