சுஷ்மாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கருத்து

கலப்பு திருமண தம்பதிக்கு பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
சுஷ்மாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கருத்து
x
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கலப்பு திருமண தம்பதி லக்னோ பாஸ்போர்ட் அலுவலர்களால் அலைகழிக்கப்பட்டதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.இதில் தலையிட்ட வெளியுறவு அமைச்சகம் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பாஜகவினரே சுஷ்மாவுக்கு எதிரான கருத்துக்குளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாஸ்போர்ட் விவகாரத்தின் போது தான் இந்தியாவிலேயே இல்லை எனவும் அதுபற்றி தனக்கு தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள சுஷ்மா, தனக்கு எதிராக பதிவிடப்பட்ட பதிவுகளையும் பகிர்ந்திருந்தார். 


இதனிடையே அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கம் கருத்தை பதிவிட்டுள்ளது. அதில் சுஷ்மாவின் முடிவை பாராட்டுவதாகவும், சூழ்நிலை எதுவாக இருந்தாலும் வன்முறையோ,  அவமதிப்போ தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்