சக அதிகாரியின் மனைவியை கொன்ற ராணுவ மேஜர்

திருமணம் செய்ய மறுத்ததால், சக அதிகாரியின் மனைவியை ராணுவ மேஜர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக அதிகாரியின் மனைவியை கொன்ற ராணுவ மேஜர்
x
டெல்லியின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் ராணுவ அதிகாரி அமித் திவிவேதி. இவரது மனைவி, சுமார் 35 வயதான சைலஜா. கடந்த சனிக்கிழமை காலை, 'பிசியோதெரபி' சிகிச்சைக்காக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்ற ஜைலஜா, வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அமித் திவேதி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சைலஜா மருத்துவமனைக்கே வரவில்லை என்ற தகவல் கிடைத்தது. 

இந்நிலையில், டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில், ஒரு பெண் பிரேதம் கிடப்பதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த அந்த பெண், ஜைலஜா தான் என தெரிய வந்தது.காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்திய நிலையில், ராணுவ மேஜர் நிக்கல் ஹண்டா தலைமறைவாகியிருந்தார். 

காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக, உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் பதுங்கி இருந்த அவர், கைதானார். கொலையின் பின்னணி, காவல்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ராணுவ மேஜர் அமித், நாகலாந்தில் 2015 ஆம் ஆண்டு பணி புரிந்த போது, சைலஜா உடன், நிக்கல் ஹண்டாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அமித் திவேதி டெல்லிக்கு பணியிட மாறுதலில் சென்றார். 

டெல்லிக்கு சென்ற போதிலும், ஜைலஜா உடன் நிக்கல் ஹண்டே, தமது நட்பை தொடர்ந்துள்ளார். இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.அமித் திவேதியின் எச்சரிக்கையையும் மீறி, இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.நாளடைவில்,  நிக்கல் ஹண்டா, தம்மை  திருமணம் செய்து கொள்ளுமாறு சைலஜாவை வற்புறுத்தியுள்ளார். ஆனால், சைலஜா திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், ஆத்திரம் அடைந்த நிக்கல்,  அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக, அடுத்த கட்ட விசாரணை நடப்பதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்