போலி பாஸ்போர்ட் தயாரிப்பு - சென்னையில் 11 பேர் கைது
பதிவு : ஜூன் 26, 2018, 07:48 AM
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் போலி பாஸ்போர்டுகள் தயாரிப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தமிழகத்தில் உள்ள பயனற்ற இந்திய பாஸ்போர்டுகளை விலைக்கு வாங்கி, அதில் தேவைப்படும் இலங்கை தமிழர்களின் புகைப்படத்தை பொருத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 80 இந்திய பாஸ்போர்ட்டுகள், 12 இலங்கை பாஸ்போர்ட்டுகள், லேப் டாப், பிரிண்டர், போலி இந்திய விசா, 85 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.