அரிய வகை ரத்தம் கொண்ட மனிதரின் சாதனை பயணம்

பாம்பே பாசிட்டிவ் என்ற அரிய அவகை ரத்தம் கொண்டுள்ள பெங்களூருவை சேர்ந்த ஒருவர், தனது கொடை உள்ளத்தால் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகிறார்.
அரிய வகை ரத்தம் கொண்ட மனிதரின் சாதனை பயணம்
x
பாம்பே பாசிட்டிவ் என்ற அரிய அவகை ரத்தம் கொண்டுள்ள பெங்களூருவை சேர்ந்த ஒருவர், தனது கொடை உள்ளத்தால் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகிறார்.

ரத்த சிவப்பணுவில் உள்ள ஆன்டிஜனை கொண்டே ரத்தத்தின் வகையை கண்டறிகிறார்கள். ஒ ரத்த பிரிவில் ஹெச் ஆன்டிஜன் இல்லாவிட்டால் அது பாப்பே குரூப் என அரிய வகை ரத்த பிரிவாக அறியப்படுகிறது. இந்த அரிய வகை ரத்தம் மும்பையில் முதன்முதலாக கண்டறியப்பட்டதால் அதற்கு பாம்பே குரூப் என பெயரிட்டனர். இந்த பாம்பே குரூப் அரிய வகை ரத்தத்தை உடலில் கொண்டுள்ள மனிதர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அந்த ரத்தத்தை கொண்டுள்ள திரிதர் என்ற பெங்களூருவை சேர்ந்தவர், இது வரை தொடர்ந்து 48 முறை ரத்த தானம் செய்துள்ளார். 

ஹைதராபாத், திருப்பதி, சென்னை. கோயம்பத்தூர், வேலூர் என முக்கிய நகரங்களில் இருந்து பாம்பே குரூப் ரத்தம் தேவை என அழைப்பு வந்ததும், ஆர்வமுடன் சென்று ரத்த தானம் செய்து வருகிறார். 
இதனை ஒரு சேவையாக செய்து வரும் திரிதர் ஏராளமான பாராட்டு சான்றிதழ்களை பெற்றிருக்கிறார். அவசர அழைப்புகள் வந்ததும் எவ்வளவு செலவானாலும் அங்கு சென்று, தாம் ரத்த தானம் செய்ய விரும்புவதாக திரிதர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்