பாறையின் நுனியில் நிற்கும், 45 டன் எடை கொண்ட கல்

மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வெண்ணைய் உருண்டை கல் குறித்த, செய்தி தொகுப்பு
பாறையின் நுனியில் நிற்கும், 45 டன் எடை கொண்ட கல்
x
ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள்,  மாமல்லபுரத்தை துறைமுக நகரமாக கொண்டு, ஆட்சி செய்த போது அங்கு ஏராளமான குடைவரைக் கோவில்களையும், மண்டபங்களையும் அமைத்தனர். 

அன்று முதல் இன்று வரை, இவற்றை கண்டுகளிப்பதற்காக ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். ஒரு பாறையின் நுனியில் அமைந்துள்ள 45 டன் எடை கொண்ட இந்தக் கல், வெண்ணைய் உருண்டைக் கல் என அழைக்கப்படுகிறது. 

சுமார் 25 யானைகளை கொண்டு கட்டி இழுக்கப்பட்ட போதிலும், இது ஒரு இன்ச் கூட நகரவில்லை என்று கூறப்படுகிறது. எந்தவித தொழில்நுட்ப வசதியும் இல்லாத அந்தக் காலத்தில்,  இந்தக் கல் எவ்வாறு பாறையின் நுனியில் பொருத்தப்பட்டது என, ஆய்வாளர்களை ஆச்சரியம் தெரிவிக்கின்றனர். 
சுனாமி, புயல் காற்று என எந்தவிதமான இயற்கை சீற்றங்கள் வந்த போதிலும் இந்த கல் ஒரு இன்ச் கூட அசையவில்லை. 

இந்த கல் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் கலைத் திறமைக்கு, சிறந்த உதாரணமாகவும் கருதப்படுகிறது. இதனால் இந்த கல்லை பார்ப்பதற்கும், அருகில் நின்று புகைப்படம் எடுப்பதற்கும், உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்