"5 நாட்களில் ரூ. 750 கோடி டெபாசிட்" - சமூக வலைதள பக்கத்தில் அமித் ஷாவை விமர்சித்த ராகுல் காந்தி

"5 நாட்களில் ரூ. 750 கோடி டெபாசிட்" - சமூக வலைதள பக்கத்தில் அமித் ஷாவை விமர்சித்த ராகுல் காந்தி
5 நாட்களில் ரூ. 750 கோடி  டெபாசிட் - சமூக வலைதள பக்கத்தில் அமித் ஷாவை விமர்சித்த ராகுல் காந்தி
x
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது சமூக வலைதள பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட சமயத்தில், அமித்ஷா இயக்குனராக உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 5 நாளில் சுமார் 750 கோடி அளவுக்கு பழைய நோட்டுகள் டெபாசிட் ஆகி முதலிடம் பிடித்துள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.  பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால், லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, தங்களின் இந்த சாதனைக்கு தலை வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார். 


 


Next Story

மேலும் செய்திகள்